மெல்பர்ன்: கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்தி ரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டி மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு வெற்றியாளரான செரீனா வில்லி யம்ஸ் (அமெரிக்கா) - 2008ஆம் ஆண்டு வெற்றியாளரான மரியா ஷரபோவா (ரஷ்யா) மோதினார்கள். நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வின் அபாரமான ஆட்டத்துக்கு முன்பு 5வது இடத்தில் இருக்கும் ஷரபோவாவின் ஆட்டம் எடுபட வில்லை. செரீனா 6-4, 6-1 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று அரை இறுதிக்குத் தகுதி பெற்றார்.ஈ° மற்றொரு காலிறுதி ஆட்டத் தில் 4ஆம் நிலை வீராங்கனையான ரட்வன்ஸ்கா (போலந்து) - 10ஆம் நிலை வீராங்கனை கார்லா (ஸ்பெயின்) மோதினார்கள். இதில் ரட்வன்ஸ்கா 6-1, 6-3 என்ற நேர்செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். அவர் ஆஸ்திரே லியப் பொது விருதுப் போட்டியில் 2வது முறையாக அரை இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார். இதற்கு 2014ஆம் ஆண்டும் தகுதி பெற்று இருந்தார்.
செரீனா அரை இறுதிக்குத் தகுதி
1 mins read
-

