தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'வித்தகன் விராத்'- புகழ்ந்து தள்ளிய டோனி

1 mins read
2392e2f7-3b7d-424c-9db1-634b39cd4faf
-

அடிலெய்ட்: ஆஸ்திரேலிய அணிக் கெதிராக நேற்று முன்தினம் அடிலெய்டில் நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இன்னும் 10 ஓட்டங் களைச் சேர்த்து சதம் எடுத்திருந் தால் ஒரே விளையாட்டரங்கில் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூவகை கிரிக்கெட் போட்டிகளி லும் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை இந்திய நட்சத்திரம் விராத் கோஹ்லி தட்டிச் சென்று இருக்கலாம். அந்த ஆட்டத்தில் 55 பந்து களில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 90 ஓட்டங்களை விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கோஹ்லி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இந்திய அணியின் வெற்றிக்குப் பங்களித்த மகிழ்ச்சியில், "அடிலெய் டில் விளையாடுவதைப் பெரிதும் விரும்புகிறேன். உலகில் எங்கு சென்றாலும் இந்த ஆடுகளத்தை எடுத்துச் செல்ல ஆசைப்படு கிறேன்," என்றார் கோஹ்லி. அத்துடன், டி20 உலகக் கிண் ணத் தொடருக்கான தங்களது ஆயத்தமும் வெற்றியுடன் தொடங்கி இருப்பது மகிழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டார். கோஹ்லி டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தை 2012ஆம் ஆண்டு அடிலெய்டில்தான் அடித் தார். 2015 உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதி ராக அங்கு நடந்த போட்டியிலும் கோஹ்லி சதம் விளாசியிருந்தார்.