சாங்கி சாதனை; 2015ல் 55.4 மி. பயணிகள்

சாங்கி சாதனை; 2015ல் 55.4 மி. பயணிகள்

1 mins read
14d39df8-1efd-4443-8204-bf2300f3d24d
-
Google News Preferred Icon

சிங்கப்பூர் சாங்கி விமான நிலை யத்தை உலக நாடுகளைச் சேர்ந்த 55.4 மில்லியன் பயணிகள் பயன் படுத்தியிருக்கின்றனர். இது, கடந்த ஆண்டில் நிகழ்த்தப்பட்ட சாதனையாகும். 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடு கையில் 2015ல் பயணிகளின் எண்ணிக்கை 2.5 விழுக்காடு கூடியது. மேலும் சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட, தரையிறங்கிய விமானங்களின் எண்ணிக்கையும் சாதனை அள வாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை ஆண் டுக்கு ஆண்டு அடிப்படையில் 1.4 விழுக்காடு அதிகரித்து 346,330 ஆனது. சாங்கி விமான நிலைய குழுமம் நேற்று இந்த விவரங்களை வெளி யிட்டது.

சாங்கி விமான நிலையத்துக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மிகவும் பரபரப்பான மாதமாக அமைந்தது. அந்த மாதத்தில் மட்டும் 5.29 மில்லியன் பயணிகள் வருகை யளித்தனர். 1981ஆம் ஆண்டில் சாங்கி விமான நிலையம் திறக்கப்பட்ட பிறகு ஒரே மாதத்தில் இத்தகைய உச்சத்தைத் தொட்டது இதுவே முதல் முறை. 2015ல் சாங்கி விமான நிலை யத்துக்கு ஜகார்த்தா, பேங்காக், கோலாலம்பூர், ஹாங்காங், தோக் கியோ, ஹோ சி மின் சிட்டி, தைப்பே, சிட்னி ஆகிய நகரங் களிலிருந்து அதிகமான பயணி கள் வந்தனர்.

சாங்கி விமான நிலையத்தின் வழியாக பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை 2015ல் 2.5 விழுக்காடு அதிகரித்தது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்