ஆஸி. பொது விருது டென்னிஸ்: இறுதிச்சுற்றில செரீனா

ஆஸி. பொது விருது டென்னிஸ்: இறுதிச்சுற்றில செரீனா

1 mins read
58413aff-f5be-4b35-8508-b47e28621e45
-

மெல்­பர்ன்: ஆஸ்­தி­ரே­லிய பொது விருது டென்னிஸ் போட்­டி­யில் அமெ­ரிக்­கா­வின் செரீனா வில்­லி­யம்ஸ் இறுதிச் சுற்­றுக்கு முன்­னே­றி­யுள்­ளார். தர­வ­ரிசை­யில் முத­லி­டத்­தில் இருக்­கும் செரீனா வில்­லி­யம்ஸ், மகளிர் ஒற்றை­யர் பிரிவில் நேற்று நடை­பெற்ற அரை­யி­றுதி ஆட்­டத்­தில் 4ஆம் நிலை­யி­லுள்ள அக்­னி­யேஸ்கா ரட்­வன்ஸ்­காவை 6=0, 6=4 என்ற நேர் செட்­களில் வீழ்த்­தினார். இதன்­மூ­லம் ஆஸ்­தி­ரே­லிய ஓபனில் இவர் 7ஆவது முறையாக இறுதிச் சுற்­றுக்கு முன்­னே­றி­யுள்­ளார். இந்த வெற்­றி­யால் மிகவும் உற்­சா­க­மடைந்­துள்ள செரீனா, இறுதிச் சுற்­றுக்கு இவ்­வ­ளவு விரைவில் முன்­னே­றி­யதைத் தன்னால் நம்ப முடி­ய­வில்லை என்று கருத்­துரைத்­துள்­ளார்.

மேலும், இறு­திச்­சுற்­றில் சிறப்­பான ஆட்­டத்தைத் தன்னால் வெளிப்­படுத்த முடியும் என்றும் அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார். இறுதிச் சுற்றில் 7ஆம் நிலை வீராங்கனை ஏஞ்ச­லிக் கெர்பர் அல்லது தர­வ­ரிசை நிலையில் பின்­தங்­கி­யி­ருக்­கும் ஜோகன்னா கோன்டாவை செரீனா எதிர்­கொள்­வார். இதில் செரீனா வெற்றி பெற்றால் 22வது தடவை­யாக கிராண்ட் ஸ்லாம் பட்­டத்தை வென்ற­வர் ஆவார்.