நெய்மார் மீது மோசடி குற்றச்சாட்டு

1 mins read
80406238-ba14-4b81-af5d-aff21e2e8593
-

சாவ் பாலோ: நட்சத்திர பிரேசில் காற்பந்து ஆட்டக்காரர் நெய்மார் வரி ஏய்ப்பிலும் மோசடியிலும் ஈடுபட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த 2006=2013 காலகட்டத்தில் அவர் இந்தத் தவறுகளை இழைத்ததாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், நெய்மாரின் தந்தை, நெய்மார் இப்போது விளையாடி வரும் பார்சிலோனா குழுவின் இரு மூத்த நிர்வாகிகள் ஆகியோர் மீதும் பிரேசில் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

2013ல் நெய்மாரை ஒப்பந்தம் செய்தபோது பார்சிலோனா மோசடியிலும் ஊழலிலும் ஈடுபட்டதாக பிரேசில் முதலீட்டு நிறுவனம் டிஐஎஸ் புகார் அளித்துள்ளது. இந்த வழக்குத் தொடர்பில் நெய்மார் ஸ்பெயின் தேசிய நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் முன்னிலையாகி விளக்கமளித்தார்.