நடப்பு வெற்றியாளருடன் கேலாங் சமநிலை

நடப்பு வெற்றியாளருடன் கேலாங் சமநிலை

1 mins read
9a47c00f-0509-46a0-9514-8e1896e4d046
-

எஸ்-லீக் காற்பந்துப் போட்டியின் நடப்பு வெற்றி யாளர் புருணை டிபிஎம்எம் குழுவுக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் கேலாங் இன்டர்நேஷனல் குழு 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது. ஆட்டத்தின் 66வது நிமிடத் தில் தப்பாட்டம் காரணமாக கேலாங் ஆட்டக்காரர் ஏமி ரெச்சாவுக்குச் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

ஆனால் துவண்டுவிடாமல் ஆடிய கேலாங் 74வது நிமிடத்தில் சஹில் சுகாமி மூலம் கோல் போட்டது. ஆனால் அடுத்த ஒரு நிமிடத்துக்குள் டிபிஎம்எம் ஆட்டத்தைச் சமப்படுத்தியது (படம்).