மட்ரிட்: ரியால் மட்ரிட் காற்பந்துக் குழுவில் விளையாடி வரும் நட்சத்திர ஆட்டக்காரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை விற்கமாட்டோம் என்று அறிவித்துள்ளார் அக்குழுவின் நிர்வாகி ஸினடின் ஸிடான். கடந்த மாதம் 27ஆம் தேதி அட்லெட்டிகோ மட்ரிட் குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் ரியால் குழு 1-0 என்ற கோல் கணக்கில் தோற்றது. 'தம்மைப் போல மற்றவர்களும் ஆடாததுதான் தோல்விக்குக் காரணம்' என்று குறைப்பட்டுக்கொண்டார் ரொனால்டோ. அவரது இவ்வார்த்தைகளால் அதிர்ச்சியடைந்த ரியால் ரசிகர்கள் அவரைக் குழுவிலிருந்து வெளியேற்ற வேண்டும் எனக் குரலெழுப்பிவரும் நிலையில், அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார் ஸிடான். படம்: ஏஎப்பி
'ரொனால்டோவை விற்கமாட்டோம்'
1 mins read
-

