கோல்கத்தா: தர்மசாலாவில் நடக்க இருந்த இந்தியா=பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி கோல்கத்தா ஈடன் கார்டன் அரங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. தர்மசாலாவில் உள்ள இமாச் சலப் பிரதேச கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கிற்கு அருகே தான் பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான இந்திய ராணுவ வீரர்களுக்கான நினை விடம் உள்ளது. இந்நிலையில், அங்கு இந்தியா=பாக். போட்டியை நடத்தினால் அது பலியான வீரர் களின் குடும்பத்தினரை மனத்தள வில் காயப்படுத்துவதாக இருக்கும் என எண்ணி, அம்மாநில அரசு பாதுகாப்பு வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து, மத்திய அரசு அங்கு பாதுகாப்பு வழங்க முன் வந்தது. ஆனாலும், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த பாகிஸ்தான் குழு அவை போதாது எனக் கூறிவிட்டது.
இதனால், பெங்களூரு அல்லது கோல்கத்தாவிற்கு போட்டி மாற்றப் படலாம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், போட்டி கோல் கத்தாவில் நடைபெறும் என அனைத்துலக கிரிக்கெட் சங்கம் (ஐசிசி) நேற்று முன்தினம் அறி வித்தது. இதனை வரவேற்றுள்ளார் மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத் தலைவரும் இந்திய அணியின் முன்னாள் தலைவருமான சௌரவ் கங்குலி. "முதலில், தர்மசாலாவிற்காக நான் வருத்தப்படுகிறேன். அதே நேரத்தில் போட்டி கோல்கத்தாவில் இடம்பெறுவதற்காக மகிழ்ச்சியும் அடைகிறேன். லீக் சுற்றில் இந்தியா பங்கேற்கும் ஆட்டங்கள் எதுவும் கோல்கத்தாவில் இடம் பெறவில்லை என்பதால் எங்க ளுக்கு ஒரு வாய்ப்பு தரும்படி கேட்டோம். அது ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது," என்றார் கங்குலி. இதற்கிடையே, இந்தியாவில் பாகிஸ்தான் விளையாட எதிர்ப்பு தெரிவித்துள்ள 'பயங்கரவாத எதிர்ப்பு இந்திய முன்னணி' எனும் அமைப்பு, ஈடன் கார்டன் ஆடு களத்தைத் தோண்டி நாசமாக்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.

