காலிறுதியில் மான்செஸ்டர் சிட்டி

காலிறுதியில் மான்செஸ்டர் சிட்டி

1 mins read
fea0740a-2ace-410f-a3c9-8d87f1ad458f
-

மான்­செஸ்டர்: சாம்­பி­யன்ஸ் லீக் காற்பந்து தொடரில் டைனமோ கியவ்=மான்­செஸ்டர் சிட்டி குழுக்­கள் மோதிய இரண்டா­வது சுற்று ஆட்­டத்­தில் இரு அணி­களுமே கோல் எதுவும் அடிக்­கா­த­தால் ஆட்டம் சம­நிலை­யில் முடிந்தது. ஆட்டம் தொடங்­கிய ஐந்து நிமி­டத்­தி­லேயே சிட்டி குழு தலைவர் வின்­சென்ட் கொம்பனி தசை பிரச்­சினை கார­ண­மாக வெளியேற, அவ­ருக்கு பதில் கள­மி­றங்­கினார் நிகோலஸ் ஒட்­ட­மென்டி. முதல் சுற்று ஆட்­டத்­தில் 3-1 என்ற கோல் கணக்­கில் மான்­செஸ்டர் சிட்டி குழு வெற்றி பெற்றது. எனவே, மொத்த கோல் எண்­ணிக்கை அடிப்­படை­யில் மான்­செஸ்டர் சிட்டி குழு முதன்­முறை­யாக காலி­று­திக்கு முன்­னே­றி­யுள்­ளது. சிட்டி குழுவில் இருந்து வெளி­யே­று­வதற்கு முன் சாம்­பின்ஸ் லீக் கிண்­ணத்தை வெல்ல வேண்டும் என அக்குழு நிர்வாகி பெல­கி­ரினி எண்ணம் கொண்­டுள்­ளார்.

அடுத்த பரு­வத்­தில் பெப் கார்­டி­யோலா சிட்டி குழுவின் நிர்­வா­கி­யாக பொறுப்­பேற்­கிறார். கடந்த மாதம் லீக் கிண்­ணத்தை வென்ற சிட்டி குழு, பிரி­மி­யர் லீக் பட்­டி­ய­லில் 12 புள்­ளி­கள் பின் தங்­கி­யுள்­ளது. எனவே, சாம்­பி­யன்ஸ் லீக் தொடரைக் கைப்­பற்றி இந்த பரு­வத்­தில் இரண்டா­வது கிண்­ணத்தை வெல்லும் நம்பிக்கை­ யு­டன் உள்ளது சிட்டி குழு.