சிங்கப்பூர்: ஏஎஃப்சி கிண்ணப் போட்டியில், 88வது நிமிடத்தில் பிலிப்பீன்சின் சிரெஸ் லா சல் குழுவை கோல் அடிக்கவிட்டதால் தெம்பனிஸ் ரோவர்ஸ் குழு தனது வெற்றியைக் கோட்டைவிட்டது. ஜாலன் புசார் அரங்கில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில், 69வது நிமிடத்தில் தெம்பனிஸ் ரோவர்ஸ் குழு முதல் கோலை அடித்தது. ஆனால், ஆட்டம் முடிய இரண்டு நிமிடம் மட்டுமே இருக் கையில் எதிரணி அடித்த கோலை தடுக்காமல் கவனக்குறை வாக விளையாடியதால் தெம்பனிஸ் ரோவர்ஸ் குழு வெற்றியைப் பறி கொடுத்து ஆட்டத்தைச் சமநிலை யில் முடித்தது. இதுகுறித்து பேசிய தெம்பனிஸ் ரோவர்ஸ் குழுவின் தலைமை பயிற்றுவிப்பாளர் சுந்தரம், "சொந்த மண்ணில் வெற்றியைப் பறி கொடுத்தது ஏமாற்றமளிக்கிறது. "குறிப்பாக, 1=0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருக்க வேண்டிய ஆட்டம் கடைசி நிமிட கவனக்குறைவால் பறிபோனது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது," என்றார்.
'வெற்றியைப் பறிகொடுத்தது ஏமாற்றம் அளிக்கிறது'
1 mins read
-

