வெற்றியை எட்டிப் பிடித்த பயர்ன் மியூனிக்

வெற்றியை எட்டிப் பிடித்த பயர்ன் மியூனிக்

2 mins read
f9d60806-a0ff-41d7-a500-e5a90729e9d4
-

மியூனிக்: சாம்­­­பி­­­யன்ஸ் லீக் காற்­­­பந்தாட்ட தொடரில் பயர்ன் மியூ­­­னி­­­க்கும் யுவெண்­­­ட­­­சும் நேற்று இரண்டா­­­வது சுற்று ஆட்­­­டத்­­­தில் மோதின. சொந்த மண்ணில் நடந்த ஆட்­­­டத்­­­தில் யுவெண்­­­டசை வீழ்த்தி காலி­­­று­­­திக்­­­குள் நுழைந் தது பயர்ன் மியூனிக் குழு. இரு அணி­­­களும் கூடுதல் நேரத்­­­திற்கு முன்புவரை 2-2 என்ற கோல்­­­க­­­ணக்­­­கில் சம­­­நிலை­­­யில் இருந்தன. ஆட்­­­டத்­­­தின் முதல் பாதியில் பயர்ன் குழு கோல் எதுவும் அடிக்­­­க­­­வில்லை ஆனால் யுவெண்டஸ் 2 கோல்கள் முன்­­­னிலை­­­யில் இருந்தது. இரண் டா­­­வது பாதி ஆட்­­­டத்­­­தின்­­­போது வெகுண்­­­டெ­­­ழுந்த பயர்ன் குழு இரண்டு கோல்களை அடித்து ஆட்­­­டத்தை சமன் செய்தது. கூடுதல் நேரத்­­­தில் கிடைத்த வாய்ப்பைச் சரியாக பயன்­­­படுத்தி 108வது நிமி­­­டத்­­­தில் தியா­­­கோ­­­வும் 110வது நிமி­­­டத்­­­தில் கோமனும் அடித்த இரண்டு கோல்களே பயர்ன் மியூனிக் குழு­விற்கு வெற்­றியைத் தந்தது.

இவ்விரு குழுக்­­­களும் மோதிய முதல் சுற்று ஆட்டம் 2-2 என்ற கோல் ­­­க­­­ணக்­­­கில் சம­­­நிலை­­­யில் முடிந்தது. மொத்த கோல் எண்­ணிக்கை அடிப்­படை­யில் 6-4 என்று முன்னிலை பெற்ற பயர்ன் காலி­று­திக்­குள் நுழைந் தது. மேலும், சொந்த மண்ணில் நடந்த கடைசி 10 ஆட்­­­டங்களி­­­லும் பயர்ன் மியூனிக் தொடர்ந்து வெற்றி பெற்று வரு­­­வது குறிப்­பி­டத்­தக்­கது. இந்த வெற்­­­றி­­­யின் மூலம் பெப் கார்­­­டி­­­யோ­­­லா­­­வின் பயர்ன் மியூனிக் இரண்டு புதிய சாதனை­­­களைப் படைத்­­­து உள்­­­ளது. அதாவது, சாம்­­­பி­­­யன்ஸ் லீக் தொடரில் 15வது முறையாக காலி­­­று­­­திக்­­­குச் செல்லும் ஒரே குழு. மற்­­­றொன்று, சொந்த மண்ணில் நடந்த கடைசி ஏழு ஆட்­­­டங்கள் ஒவ்­­­வொன்­­­றி­­­லும் குறைந்தது 3 கோல்கள் அடித்­­­தது. கடந்த பரு­­­வத்­­­தில் இரண்டா­­­வது இடத்தைப் பிடித்த யுவெண்ட­­சுக்கு, இந்த முறை காலி­­­று­­­திக்­­­கு­­­கூ­­­டச் செல்ல முடி­­­யா­­­மல் வெளி­­­யே­­­றிய இந்த தோல்வி கசப்­­­பான ஒன்றா­­­கும்.

பயர்ன் மியூனிக் குழுவின் மத்திய திடல் ஆட்டக்காரர் தாமஸ் முல்லர் உதைக்கும் பந்தைத் தடுக்கப் பார்க்கும் யுவெண்டசின் ஹெர்னானேஸ். படம்: ஏஎஃப்பி