யூரோப்பா லீக் காற்பந்து: மேன்யூ, ஸ்பர்ஸ் வெளியேறின

யூரோப்பா லீக் காற்பந்து: மேன்யூ, ஸ்பர்ஸ் வெளியேறின

2 mins read
a59b92df-d038-4e68-8184-14cba442e0bd
-

ஓல்ட் டிராஃபர்ட்: யூரோப்பா லீக் காற்பந்துப் போட்டிகளில் நேற்று நடைபெற்ற தகுதிச் சுற்று ஆட்டங்களில் இங்கிலாந்து குழுக் களான மான்செஸ்டர் யுனை டெட்டும் டோட்டன்ஹம் ஹாட்ஸ் பர்சும் வெளியேறின. இதில் முதல் சுற்றில் சென்ற வாரம் லிவர்பூல் அணியிடம் 0-2 என்ற கோல் எண்ணிக்கையில் தோல்வியடைந்த மான்செஸ்டர் யுனைடெட் குழு நேற்றைய ஆட்டத்தில் 1-1 என சமநிலை கண்டு மொத்தம் 1-3 என்ற கோல் எண்ணிக்கையில் லிவர்பூல் அணியிடம் தோல்வியைத் தழுவியது. சென்ற வாரம் 0-2 என தோல்வியடைந்த மான்செஸ்டர் யுனைடெட் அணி, நேற்றைய ஆட்டத்தில் குறைந்தது மூன்று கோல்கள் போட்டு கோல் எதுவும் வாங்காமல் தப்பிக்க வேண்டிய நிலையில் இருந்தது. ஆட்டம் தொடங்கியபோது அதற்கேற்றாற்போல் சுறுசுறுப்பாக விளையாடிய யுனைடெட் குழு 32ஆம் நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு கோல் போட்டு முன்னுக்குச் சென்றது.

ஆனால், அதன்பின் மார்க்கஸ் ரோ-ஹோ, யுவான் மாட்டா, ஜெஸ்ஸி லிங்கார்ட் போன்ற யுனைடெட்டின் வீரர்கள் தங்க ளுக்குக் கிடைத்த கோல் போடும் வாய்ப்புகளை வீணடித்ததால் யுனைடெட் ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில்தான், முதல் பாதி ஆட்டம் முடியும் தறுவாயில் லிவர்பூலின் கோட்டின்யோ தமது அணி சார்பாக ஒரு கோல் போட்டு யுனைடெட்டின் யூரோப்பா லீக் விருது கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதன்பின் யுனைடெட் குழு மீண்டு வரமுடியாமல் தத் தளித்தது.

நேற்றைய ஆட்டத்தில் லிவர்பூலின் கோட்டின்யோ (கறுப்பு சீருடையில்) மான்செஸ்டர் யுனைடெட் குழுவிற்கு எதிராக கோல் போடுகிறார். படம்: ஏஎஃப்பி