சாதனை நேரத்தை முறியடித்த ஸ்கூலிங்

சாதனை நேரத்தை முறியடித்த ஸ்கூலிங்

1 mins read
01c47522-92fa-4717-9690-7088a45ca5ef
-

சிங்கப்பூரின் நீச்சல் போட்டி நட்சத்திரமான ஜோசஃப் ஸ்கூலிங் புதிய சாதனை நேரத் தைப் பதிவு செய்துள்ளார். அமெரிக்காவில் உள்ள அட்லென்டாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற என்சிசிஏ நீச்சல் போட்டியில் 100 யார்டு வண்ணத்துப்பூச்சி பாணிப் போட்டியில் ஸ்கூலிங் பங்கெடுத் தார். நடப்பு வெற்றியாளருமான ஸ்கூலிங் இம்முறையும் முதலிடத் தைக் கைப்பற்றி தங்கப் பதக்கம் வென்றார். அதுமட்டுமல்லாமல், 2009ஆம் ஆண்டில் ஆஸ்தின் ஸ்டேப் என்பவர் படைத்த 44.18 வினாடிகள் சாதனை நேரத்தை அவர் முறியடித்தார். போட்டியை முடிக்க ஸ்கூலிங் 44.01 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் இடத்தில் ஃபிளோரிடாவின் கேலப் டிரெஸ்செலும் மூன்றாவது இடத்தில் ஜாக் கொன்ஜரும் வந்தனர்.