பெல்ஜியத்தை திக்குமுக்காட வைத்த ரொனால்டோ

பெல்ஜியத்தை திக்குமுக்காட வைத்த ரொனால்டோ

2 mins read
57abca49-9f4f-48dd-aaef-ee31d1831c56
-

இங்­கி­லாந்­துக்கு 1966ல் உலகக் கிண்ணம் கிடைத்­த­து­போல், பிரான்­சுக்கு 1998ல் உலகக் கிண்ண வெற்­றி­யா­ளர் விருது கிடைத்­த­து­போல் போர்ச்­சு­கல்­லுக்கு 2004ஆம் ஆண்டின் ஐரோப்­பிய கிண்ண வெற்­றி­யா­ளர் விருது கிடைக்­கும் என்று பல­ரா­லும் எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால், அது நிறை­வே­றா­மல் கிரீஸ், போர்ச்­சு­கலை இறுதிப் போட்­டி­யில் வென்ற நிலையில் அன்று மைதா­னத்­தில் செய்­வத­றி­யாது கண்­களில் நீர் வழிந்த­படி நின்­றி­ருந்தார் போர்ச்­சு­கீ­சிய வீரரும் முன்னாள் மான்­செஸ்டர் யுனைடெட் வீர­ரு­மான கிரிஸ்­டி­யானோ ரொனால்டோ.

இவர் கடந்த நான்கு ஆட்­டங்களில் கோல் எதுவும் போடாமல் இருந்த­தால் மட்டுமே இவர் காற்­பந்து உலகில் மங்­கி­விட்­டாரோ என்ற எண்ணம் பலரது மனதில் எட்டிப் பார்க்­கும் நிலையில் நேற்று அதிகாலை நடந்த நட்­பு­முறை காற்­பந்தாட்­டம் ஒன்றில் பெல்­ஜி­யத்­துக்கு எதிராக இவர் ஒரு கோல் போட்டு அந்­நாட்டை 2-=1 என்ற கோல் எண்­ணிக்கை­யில் தோற்­க­டிக்க உதவி­யுள்­ளார். நேற்றைய ஆட்­டத்­தில் இவர் வெளிப்­படுத்­திய அற்­பு­தத் திறன், கோல் போட வேண்டும் என்ற இவரது துடிப்பு அனைத்­துக்­கும் இவ­ருக்கு கிடைத்த அந்த ஒரு கோலுக்கு சம­மா­காது என்று கூறு­கின்ற­னர் காற்­பந்து ரசி­கர்­கள். இவரைப் போலவே போர்ச்­சு­க­லின் தங்கத் தலை­முறை­யி­னர் என்று கொண்டா­டப்­படும் இன்றைய காற்­பந்து அணியின் மற்றொரு வீரரான லுயிஸ் நானி பெல்­ஜி­யத்­துக்கு எதிரான இன்னொரு கோலை போட்டார்.

பிரான்­சில் இன்னும் இரண்டு மாதங்களில் நடை­பெ­ற­வுள்ள ஐரோப்­பிய கிண்ண காற்­பந்து போட்டியே போர்ச்­சு­கல் வெற்­றி­யா­ளர் விருதை வெல்லக் கிடைத்­தி­ருக்­கும் கடைசி வாய்ப்பு என்று பலரால் கரு­தப்­படு­கிறது. 1966ஆம் ஆண்­டி­லி­ருந்து கடைசி எட்டு நாடுகள் பங்­கேற்­கும் இறுதிச் சுற்­று­வரை சென்­றுள்­ளது போர்ச்­சு­கல். 2012ஆம் ஆண்டு நடை­பெற்ற ஐரோப்­பிய கிண்ணக் காற்­பந்து அரை­யி­றுதி ஆட்­டத்­தில் பெனால்டி கோல்­களில் மயி­ரிழை­யில் ஸ்பெயின் நாட்­டி­டம் தோற்றது போர்ச்­சு­கல்.

பெல்ஜிய வீரரிடம் இருந்து பந்தைத் தட்டிப் பறிக்கப் போராடும் போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ. படம்: ஏஎஃப்பி