வெலன்சியா: வெலன்சியா காற்பந்தாட்டக் குழுவின் பயிற்றுவிப்பாளர் கேரி நெவில் பணிநீக்கம் செய்யப்பட்டார். இச்செய்தியை அந்த ஸ்பானிய காற்பந்துக் குழு உறுதி செய்தது. இணையத்தளம் ஒன்றில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "வரும் பருவங்களில் வெலன்சியா குழுவின் நலன் களைக் கருத்தில் கொண்டு, கவனமாக பரிசீலிக்கப்பட்டப் பிறகு இந்த மாற்றத்திற்கான முடிவு எடுக்கப்பட்டது. வெலன்சியா குழுவிற்காக பணியாற்றிய கேரி நெவிலுக்கு எங்களது நன்றி," என்று அதில் தெரிவிக்கப்பட்டது. கேரி நெவிலுக்குப் பதிலாக மெஸ்டல்லா குழுவின் முந்தைய உதவி பயிற்றுவிப்பாளரான பாக்கோ அய்ஸ்டரான் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் தற்போதைய காற்பந்து பருவம் வரை பயிற்றுவிப்பாளாராக இருப்பார் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
வெலன்சியா: நெவிலுக்கு பதில் பாக்கோ அய்ஸ்டரான்
1 mins read
-

