பார்சிலோனாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ரொனால்டோ

பார்சிலோனாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ரொனால்டோ

2 mins read
5eeee832-7fb8-4e98-992d-e10b584de881
-

பார்­சி­லோனா: ஸ்பானிய லீக் காற்­பந்தாட்­டத் தொடரில் 39 ஆட்­டங்க­ளாக பார்­சி­லோனோ பெற்று வந்த தொடர் வெற்­றிகளுக்கு முற்­றுப்­புள்ளி வைத்தது ரியால் மட்ரிட். நீண்ட நேரத்­திற்­குப் பிறகு, 56வது நிமி­டத்­தில் ஆட்­டத்­தின் முதல் கோல் விழுந்தது. பார்­சி­லோனா­வின் பிக்கே அந்த கோலை அடித்தார். அந்த கோலை 62வது நிமி­டத்­தில் சமன் செய்தார் கரீம் பென்சிமா. இப்­ப­ரு­வத்­தில் ஸ்பா­னி­ய லீக்கில் இதுவரை 21 கோல்களை அடித்­துள்­ளார் கரீம் பென்சிமா. இவர் கோல் கணக்கில் முதல் நிலையில் இருக்­கும் ரொனால்­டோவை­விட எட்டு கோல்கள் பின்­தங்­கி­யுள்­ளார்.

இரண்டு முறை மஞ்சள் அட்டை பெற்­ற­தால், ரியால் மட்ரிட் குழுத் தலைவர் செர்ஜியோ ரமோஸ் 83வது நிமி­டத்­தில் வெளி­யேற்­றப்­பட்­டார். ஆனால், அடுத்த இரண்டு நிமி­டத்­தில் கோல் அடித்­தார் ரியால் குழுவின் நட்­சத்­திர வீரர் ரொனால்டோ. எனவே 2=1 என்ற கோல் கணக்கில் வென்றது ரியால் மட்ரிட். வெற்­றிக்கு வித்­திட்ட ரொனால்­டோ­வின் இந்த கோலால் ரியால் மட்ரிட் பட்­டி­ய­லில் மூன்றா­வது இடத்­தில் உள்ளது. பார்­சி­லோனாவை­விட ஏழு புள்­ளி­கள் பின்­தங்­கி­யுள்ள ரியா­ல் மட்ரிடுக்கு இன்னும் ஏழு ஆட்­டங்கள் விளையாட வேண்­டி­யுள்­ளது.

இந்­நிலை­யில், ஸ்பானிய லீக்கை ரியால் மட்ரிட் வெல்லும் வாய்ப்­புள்­ள­தாக கேரத் பேல் நம்­பிக்கை தெரி­வித்­தார். "லீக் தொடரைக் கைப்­பற்ற வேண்­டு­மானால், நாங்கள் இந்த ஆட்­டத்தை வெல்லவேண்டிய நிலை இருந்தது," என்றார் பேல். இந்த வெற்றி, இப்­ப­ரு­வத்­தில் இனி வரும் ஆட்­டங்களைச் சிறப்­பாக விளையாட நம்­பிக்கை அளிக்­கும் என்றும் அவர் கூறினார்.

ரியால் மட்ரிட் குழுவிற்கான இரண்டாவது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தார் ரொனால்டோ. படம்: ராய்ட்டர்ஸ்