நியூசிலாந்து: இந்திய கிரிக்கெட் வீரருக்கு விருது

நியூசிலாந்து: இந்திய கிரிக்கெட் வீரருக்கு விருது

1 mins read
4d772b52-186c-4785-8607-8f0abc22e365
-

நியூசிலாந்து நாட்டின் கடந்த ஆண்டிற்கான சிறந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர் விருதை வென்றிருக்கிறார் இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் பிறந்தவரான 25 வயது பரத் போப்லி. 2013ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்தின் நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும் பரத், பிளங்கெட் கிண்ணத் தொடரில் 1149 ஓட்டங்களை (சராசரி 65.78, அதிகபட்சம் 172) விளாசினார். பிளங்கெட் கிண்ணப் போட்டிகளில் ஒரே பருவத்தில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த 4வது வீரர் என்ற பெருமையும் இவருக்குக் கிட்டியது. தௌரங்க ஆண்கள் கல்லூரி அணிக்காகவும் 'பே ஆஃப் பிளென்டி' போட்டியிலும் இப்போதைய நியூசி. அணித் தலைவர் கேன் வில்லியம்சனுடன் இணைந்து இவர் விளையாடியுள்ளார். படம்: நியூசிலாந்து கிரிக்கெட்