இங்கிலாந்தைச் சேர்ந்த தி டெலி கிராஃப் செய்தித்தாள், சிங்கப்பூர் தேசிய காற்பந்துக் குழுவின் கோல்காப்பாளரான ஹசான் சன்னியை உலகில் உள்ள ஆகச் சிறந்த 20 கோல்காப்பாளர்களில் ஒருவர் என்று அடையாளம் கண்டுள்ளது. தி டெலிகிராஃப் செய்தித்தாள் வெளியிட்ட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஒரே ஆசியர் என்ற பெருமை ஹசான் சன்னியைச் சேரும். ஹசான் சன்னி தற்போது தாய்லாந்தின் ஆர்மி யுனைடெட் குழுவுக்காக விளையாடி வருகிறார். அவருக்குப் பதிலாக அண் மைய காலமாக இஸ்வான் மாபுட் சிங்கப்பூர் குழுவின் கோல் காப்பாளராக இருந்து வருகிறார்.
சிறந்த கோல்காப்பாளர் ஹசான் சன்னி
1 mins read
-

