மெர்சிடிஸைப் பின்னுக்குத் தள்ளிய ஃபெராரி

மெர்சிடிஸைப் பின்னுக்குத் தள்ளிய ஃபெராரி

1 mins read
169da0a3-ae5f-40f3-b211-f505e6b4ae51
-

ஷங்காய்: ஈராண்டுகளாக ஃபார்முலா1 கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் குழுவின் லூயிஸ் ஹேமில்டனும் நிக்கோ ரோஸ்பெர்க்கும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நாளை சீன கிராண்ட் பிரீ பந்தயம் நடக்க இருப்பதால் நேற்று இரு பயிற்சிப் பந்தயங்கள் இடம்பெற்றன. முதல் பயிற்சியில் ரோஸ்பெர்க் முதலாவதாக வந்தாலும் 2வது பயிற்சியில் அவரால் மூன்றாம் இடமே பிடிக்க முடிந்தது. ஃபெராரி குழுவின் கிமி ராய்க்கொனன், செபாஸ்டியன் வெட்டல் ஆகியோர் முறையே முதலிரு இடங்களில் வந்தனர். ஹேமில்டன் நான்காமிடத்தைப் பிடித்தார்.