'லெஸ்டருக்கு உதவுவோம்'

'லெஸ்டருக்கு உதவுவோம்'

1 mins read
e546bf11-7619-4d12-be91-120c32be3ffe
-

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பட்டியலில் முன் னிலை வகிக்கும் லெஸ்டர் சிட்டிக்குப் பட்டத்தை வெல்ல உதவி செய்ய விரும்புவதாக ஸ்டோக் சிட்டியின் அணித் தலைவர் ரயன் ஷாகிராஸ் தெரிவித்துள்ளார். லீக் பட்டியில் இரண்டாவது நிலையில் இருந்து லெஸ்டர் சிட்டி யை விரட்டிக்கொண்டு வரும் ஸ்பர்ஸ் குழுவை ஸ்டோக் சிட்டி நாளை சந்திக்கிறது. ஸ்பர்ஸ் குழுவைத் தோற்கடித்து லெஸ்டர் சிட்டியை அது நெருங் காதபடி பார்த்துக்கொள்ள ஷாகி ராஸ் திட்டமிட்டுள்ளார். கடந்த பருவத்தில் இரண்டாம் நிலை லீக்குக்குத் தள்ளப்படும் அபாயத்தை எதிர்நோக்கிய லெஸ்டர் தற்போது லீக் பட்டத்தை நெருங்கி வருகிறது. எஞ்சியிருக்கும் ஐந்து லீக் ஆட்டங்களில் மூன்று ஆட்டங் களை லெஸ்டர் கைப்பற்றினால் பட்டம் வெல்வது உறுதி.