'பிரிமியர் லீக்கின் சிறந்த ஆட்டக்காரர் அகுவேரா'

'பிரிமியர் லீக்கின் சிறந்த ஆட்டக்காரர் அகுவேரா'

1 mins read
01524f01-1240-4d7f-8f30-0c51f9ddc1d1
-

இங்­கி­லிஷ் காற்­பந்துத் லீக்கின் சிறந்த தாக்­கு­தல் ஆட்­டக்­கா­ரர் அகுவேரா என்று கூறி­யுள்­ளார் மான்­செஸ்டர் சிட்டி குழுவின் நிர்வாகி பெல­கி­ரினி. நேற்று அதிகாலை செல்சிக்கு எதிராக விளை­யா­டிய சிட்டி குழு 3=0 என்ற கோல் கணக்­கில் வெற்றி பெற்றது. அந்த மூன்று கோல்­களை­யுமே செர்ஜியோ அகு­வே­ரா­ மட்டுமே போட்டார். அத்­து­டன் இந்தப் பருவத்தில் மட்டும் 21 கோல்­களை போட்­டுள்­ளார் அவர். 22 கோல்களை அடித்த டோட்­டன்ஹ்ம்­மின் ஹேரி கேன்னைவிட ஒரு கோல் மட்டுமே குறைவாக போட்டுள்ளார் அகுவேரா. கடந்த ஐந்து பரு­வங்களை­யும் சேர்த்து, லீக் தொடரில் மட்டும் 99 கோல்களை அடித்­துள்­ளார் அகுவேரா.

ஒவ்வொரு போட்டியிலும் மாறு­பட்ட ஆட்­டத்திறனை வெளிப்­ படுத்­து­கிறார் அகுவேரா. இந்த லீக் தொடரின் சிறந்த தாக்­கு­தல் ஆட்­டக்­கா­ரர் அவர் என்­ப­தில் எந்த சந்­தே­க­மும் இல்லை," என்றார் சிட்டி குழுவின் நிர்வாகி பெலி­கி­ரினி.

இந்தப் பருவத்தில் செல்சிக்கு எதிரான ஆட்டத்தின்போது தனது இரண்டாவது ஹாட்ரிக் கோல்களைப் புகுத்திய அ-குவேரா, கடந்த அக்டோபரில் நியூகாசல் குழுவுக்கு எதிராக ஐந்து கோல்களைப் போட்டார். படம்: ஏஎஃப்பி