சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் பெண்களுக் கான ஒற்றையர் பட்டத்தை வென்றார் தாய்லாந்தின் ரட்சனோக் இந்தனான். இதனால், உலகின் முதல் நிலை வீராங்கனையாக அவர் முன்னேறியுள்ளார். சிங்கப்பூர் ஓபன் போட்டியில் சீனாவின் சன்யூவை 18=21, 21=11, 21=14 என்ற செட்களில் வென்றார் ரட்சனோக். கடந்த சில வாரங்களில் மூன்று சூப்பர் சீரிஸில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்று பட்டங்களை வென்ற முதல் பெண் விளையாட்டாளர் என்ற பெருமையையும் பெற்று உள்ளார்.
14வது நிலையில் உள்ள சீன வீராங்கனையான சன் யூவிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. கைகுட்டையை பயன்படுத்த வேண்டும் என்ற சீன வீராங் கனையின் வேண்டுகோளை நிராகரித்தார் நடுவர். நடுவர் அனுமதியை மறுத்த போதும், அவ்வாறு செய்ததற்காக சீன வீராங்கனைக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் பட்டம் வென்ற ரட்சனோக். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

