பாகிஸ்தான் தேர்வுக்குழு தலைவராக இன்சமாம்

பாகிஸ்தான் தேர்வுக்குழு தலைவராக இன்சமாம்

1 mins read

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழுத் தலைவராக அந்த அணியின் முன்னாள் தலைவர் இன்சமாம் உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு முதல் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றி வந்தார் 46 வயது இன்சமாம். இந்நிலையில், பாகிஸ்தான் தேர்வுக்குழுத் தலைவராக அவரை நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விரும்பியது. இதையடுத்து ஆப்கான் பயிற்று விப்பாளர் பதவியிலிருந்து வில கிய இன்சமாம் நேற்று முன் தினம் பாக். புதிய தேர்வுக்குழுத் தலைவராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.