நியூகாசல்: நியூகாசலுக்கும் மான்செஸ்டர் சிட்டிக்கும் இடையிலான இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டம் 1=1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. செர்ஜியோ அகுவேரோ தமது 100வது பிரிமியர் லீக் கோலைப் போட்டும் சிட்டியால் நியூகாசலைத் தோற்கடிக்க முடியாமல் போனது. ஆட்டத்தின் 14வது நிமிடத்திலேயே சிட்டியின் கோல் புகுந்தது. சிட்டிக்குக் கிடைத்த ஃப்ரீகிக் மூலம் நியூகாசலின் பெனால்டி எல்லைக்குள் அனுப்பப்பட்ட பந்தை அகுவேரோ தலையால் முட்டி கோலாக்கினார்.
ஃப்ரீகிக் எடுக்கப்பட்டபோது அகுவேரோ 'ஆஃப் சைட்'டிலிருந்து திரும்பியதாகவும் அதன் பிறகே பந்தைத் தலையால் முட்டி கோல் போட்டதாகவும் நியூகாசல் ஆட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், நடுவர் அவர்களது முறையீடுகளுக்குச் செவிசாய்க்க வில்லை. ஏற்கெனவே இரண்டாம் நிலை லீக்குக்குத் தள்ளப்படும் அபாயத்தை எதிர்நோக்கும் நியூகாசலுக்குக் கிடைத்த இந்தப் பின்னடை வால் அரங்கில் கூடியிருந்த அதன் ரசிகர் களின் முகங்கள் வாடின.
நியூகாசலின் அனிதா (வலக்கோடி) அனுப்பிய பந்து வலைக்குள் சென்றது. அவரது கோல் முயற்சியைத் தடுக்க முடியாமல் சிட்டி தற்காப்பு ஆட்டக்காரர்களின் பரிதவிப்பு அவர்களது முகங்களில் நிழலாடியது. கோல்காப்பாளர் ஜோ ஹார்ட்டைக் கடந்து சென்ற பந்து வலையைத் தொட்டது. படம்: ராய்ட்டர்ஸ்

