கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற உலகப் பெண்கள் சுவர்ப்பந்துப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல் அதிர்ச்சித் தோல்வி அடைந்துள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் உலகப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல், ஹாங்காங் வீராங்கனை அனி அயுவைச் சந்தித்தார். 62 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தீபிகா பலிக்கல் 8-11, 9-11, 11-6, 11-6, 7-11 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி கண்டு வெளியேறினார்.
சுவர்ப்பந்து: தீபிகா பலிக்கல் அதிர்ச்சித் தோல்வி
1 mins read
-

