மட்ரிட்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்துத் தொடரின் அரை இறுதி முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் அட்லெட்டிகோ மட்ரிட் குழு 1=-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியின் பயர்ன் மியூனிக் காற்பந்துக் குழுவைத் தோற்கடித்தது. போட்டியின் 11வது நிமிடத்தி லேயே அற்புதமான கோலை அடித்து அரங்கில் குழுமியிருந்த ரசிகர்களை உற்சாகம் கொள்ளச் செய்தார் அட்லெட்டிகோ குழுவின் சவுல் நிகெஸ். 21 வயதுக்குட்பட் டோருக்கான ஸ்பெயின் அணி வீரரான அவர், பயர்ன் வீரர்கள் நால்வரின் தடுப்பைத் தாண்டிச் சென்று உதைத்த பந்து வலைக்குள் புகுந்தது.
அதற்கு முன்னதாக, வெகு தொலைவில் இருந்து அவர் வலையை நோக்கி பந்தை உதைத்த போதும் அது பயர்ன் கோல் காப்பாளர் மானுவல் நூயர் கைகளில் தஞ்சமடைந்தது. அதன்பிறகு ஆட்டத்தில் பயர்ன் குழு ஆதிக்கம் செலுத்திய போதும் அக்குழுவால் கோலேதும் போட முடியவில்லை. பயர்ன் வீரர் டேவிட் அலாபா உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பி யதால் ஆட்டத்தைச் சமன்செய்யும் வாய்ப்பு பறிபோனது. ஆட்டத்திற்குப் பின் பேசிய பயர்ன் குழுவின் நிர்வாகி கார்டி யோலா, "ஒட்டுமொத்தமாக இது ஒரு நல்ல ஆட்டம்தான். ஆனால், எங்களது தொடக்கம்தான் மோச மாக இருந்தது. எங்களது தவறு களால்தான் தோற்றுப்போனோம்," என்றார்.
அணியின் வெற்றி கோலை அடித்த சவுல் நிகெஸை (எண் 17) பாராட்டிப் பரவசமடையும் சக அட்லெட்டிகோ மட்ரிட் காற்பந்துக் குழு வீரர்கள். படம்: ஏஎஃப்பி

