தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகத் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்த ஸ்கூலிங்

1 mins read
d546c5d2-07d0-4174-9f78-2fc20c34644e
-

சிங்கப்பூர்: நீச்சல் வீரர் ஜோசப் ஸ்கூலிங் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அட்லாண்டாவில் நடந்த இந்தப் போட்டியில் பந்தய தூரத்தை 51.86 விநாடிகளில் நீந்திய ஸ்கூலிங், இந்த பருவத்தின் சிறந்த 20 வீரர்களுக்கான உலகத் தரவரிசைப் பட்டியலில் 15வது இடத்தில் உள்ளார். 52.02 விநாடிகளில் நீந்திய அமெரிக்கா வின் டாம் ‌ஷீல்ட்ஸ் இரண்டாவது இடத்தையும் காங்கேர் 53.33 விநாடிகளில் நீந்தி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

இவ்வெற்றியின் மூலம், இந்த பருவத்திற் கான உலகத் தரவரிசைப் பட்டியலில் முதல் 20 இடங்களில் ஒன்றைப் பிடித்தாலும் கடந்த ஆண்டு ரஷ்யாவில் நடந்த உலக வெற்றியாளர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற போது அவர் எடுத்துக்கொண்ட நேரமான 50.96 விநாடியைவிட இது கூடுதல் நேரமாகும். கடந்த ஆண்டு நடந்த உலகக் கிண்ணத் தொடரில் தென்னாப்பிரிக்க வீரர் ஒருவர் இதே பிரிவில் 51.09 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்ததே வேகமான நேரமாகும்.