லுவிஸ்வில்: அமெரிக்காவில் மறைந்த குத்துச்சண்டை சகாப்தம் முகம்மது அலியின் இரண்டு நாள் இறுதிச் சடங்கு வியாழக் கிழமையன்று அவர் பிறந்த கென்டக்கி மாநிலம் லுவிஸ்வில் லில் தொடங்கியது. அவருடைய இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்க மக்கள் வெள்ளம் ஆயிரக்கணக்கில் திரண்டது. நேற்று அவரது இறுதி ஊர்வலம் அவர் சிறு வயதில் தங்கியிருத்த வீடு, அலி மையம், ஆப்ரிக்க=அமெரிக்க பாரம்பரிய மையம் ஆகிய இடங்களைத் தாண்டி அவரது பெயரைத் தாங்கி நிற்கும் முகம்மது அலி பொலிவார்ட் என்ற சாலை வழி யாக நகரின் முக்கிய பகுதிகளில் சென்றது.
"முகம்மது அலி ஒரு வெற்றி வீரர், குத்துச்சண்டை சகாப்தம் மட்டுமல்ல, அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரரும்கூட. உலகில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரின் சார்பாக அவர் போராடினார்," என்று துருக்கிய அதிபர் ரெசப் தயிப் எர்டோகன் புகழாரம் சூட்டியதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
அமெரிக்காவின் லுவிஸ்வில் நகரில் குத்துச்சண்டை சகாப்தம் முகம்மது அலியின் நல்லுடல் இஸ்லாமிய முறையிலான தொழுகைக்கு எடுத்துச் செல்லும் சமயம் திரண்டிருந்த ரசிகர்கள் புகைப்படம் எடுக்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

