கடைசி நேர ஜாலம்; பிரான்ஸ் வெற்றி

கடைசி நேர ஜாலம்; பிரான்ஸ் வெற்றி

1 mins read
9c89ef14-786a-46e2-890f-835085a27a19
-

பாரிஸ்: ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் டிமிட்ரி பாயெட் போட்ட அபார கோலால் ஐரோப்பிய கிண்ண காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்தும் பிரான்ஸ் வெற்றி யைச் சுவைத்துள்ளது. சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலை 3 மணிக்கு ருமேனி யாவை எதிர்த்து பிரான்ஸ் களமிறங்கியது. அண்மையில் பிரெஞ்சுத் தலைநகர் பாரிசில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலின் காரணமாகப் விளையாட்டரங்கத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவைக்கப்பட்டிருந்தன.

இதே ஸ்டேட் டி பிரான்ஸ் விளையாட்டரங்கத்திற்குள்தான் ஏழு மாதங்களுக்கு முன்பு பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான நட்புமுறை ஆட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்த முயற்சி செய்திருந்தனர். இருப்பினும், இவ்வாண்டுக்கான ஐரோப்பிய கிண்ண காற்பந்துப் போட்டியைத் துவக்கி வைக்கும் இந்த ஆட்டத் தைக் காண ரசிகர்கள் பெருந் திரளாய் வந்திருந்தனர்.

விழாக் கோலம் பூண்ட விளையாட்டரங்கம் இருதரப்பு ரசிகர்களின் உற்சாகமிக்க ஆரவாரங்களால் களைக்கட்டியது. ஆட்டம் தொடங்கியதை அடுத்து பிரான்ஸ் சற்று எச்சரிக் கையுடன் விளையாடியது. முதல் ஐந்து நிமிடங்களிலேயே ருமேனி யாவுக்கு கோல் போடும் வாய்ப்பு கிட்டியது. கார்னர் வாய்ப்பு மூலம் வந்த பந்தை போக்டான் ஸ்டான்கு தலையால் முட்டி வலை நோக்கி அனுப்பினார்.

கடைசி நிமிடத்தில் கோல் போட்டு வெற்றியை உறுதி செய்து விளையாட்டரங்கத்தில் கூடியிருந்த பிரெஞ்சு ரசிகர்களுடன் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள விரைகிறார் டிமிட்ரி பயெட் (இடது). இறுதியில் ஒரு புள்ளிகூட கிடைக்காமல் போய்விட்டதே என்ற அதிர்ச்சியுடன் செய்வதறியாது தவிக்கும் ருமேனிய வீரர் (வலது). படம்: ஏஎஃப்பி