இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் டோனி, ஒரு நாள் போட்டிகளில் 350 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய விக்கெட் காப்பாளர் என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஸிம்பாப்வேவுக்கு எதிராக ஹராரேயில் நடைபெற்ற 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் பும்ரா பந்துவீச்சில் எல்டன் சிகும்பராவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய விக்கெட் காப்பாளர் என்ற சிறப்பை டோனி பெற்றுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 482 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை வீரர் சங்ககாரா அதிக விக்கெட்டு கள் வீழ்த்தியவர்கள் பட்டி யலில் முதலிடத்தில் உள்ளார்.
டோனியின் சாதனை
1 mins read

