சாம்பியன்ஸ் கிண்ண ஹாக்கி: வெள்ளி வென்றது இந்தியா

சாம்பியன்ஸ் கிண்ண ஹாக்கி: வெள்ளி வென்றது இந்தியா

1 mins read
2b28593d-99b2-4e4a-a212-ce1a2e7051c1
-

லண்டன்: சாம்பியன்ஸ் கிண்ண ஹாக்கி தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த இந்திய அணி முதன்முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. 36வது சாம்பியன்ஸ் கிண்ண ஹாக்கி தொடர் கடந்த 10ஆம் தேதி லண்டனில் தொடங்கியது. இதில் இந்தியா, ஆஸ்திரே லியா, இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், தென் கொரியா என 6 அணிகள் பங்கேற்றன. 36 ஆண்டுகளில் முதன்முறை யாக இந்திய அணி இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 13 முறை இத்தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியாவை இந்திய அணி இறுதிப் போட்டியில் எதிர்கொண்டது.

இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடியதால் ஆட்ட நேர முடிவில் கோல் எதுவும் இல்லாமல் சமநிலையில் இருந்தன. எனவே, இரு அணிகளுக்கும் 'பெனால்டி' வாய்ப்பு வழங்கப் பட்டது. இதில் இந்திய அணி 1=3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இதன்மூலம் இத் தொடரில் முதன்முறையாக வெள்ளியை வென்றது இந்தியா. இந்திய அணி கடைசியாக கடந்த 1982ஆம் ஆண்டு நெதர்லாந்தில் நடந்த தொடரில் வெண்கலப் பதக்கத்தைக் கைப் பற்றியது. இந்தத் தொடரை வென்றுள்ள ஆஸ்திரேலியா, 14வது முறையாக கிண்ணத்தை வென்றது குறிப் பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய வீரர்கள் கடும் போட்டி கொடுத்தனர். படம்: இணையம்