பிரேசிலின் புதிய பயிற்றுவிப்பாளராக டிட்டே

பிரேசிலின் புதிய பயிற்றுவிப்பாளராக டிட்டே

1 mins read
ca154da6-c9b7-4117-8b47-64517b2cc459
-

ரியோ டி ஜெனிரோ: பிரேசில் காற்பந்து அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக 55 வயது டிட்டே (படம்) நியமிக்கப்பட்டு உள்ளார். அமெரிக்காவில் நடந்து வரும் கோப்பா அமெரிக்கா காற்பந்துக் கிண்ணப் போட்டிகளில் பிரேசில் அணி முதல் சுற்றைத் தாண்டவில்லை. 1987ஆம் ஆண்டிற்குப் பிறகு அந்தத் தொடரில் பிரேசிலின் ஆக மோசமான செயல்பாடு இதுதான். இதையடுத்து, அதன் பயிற்றுவிப்பாளர் பொறுப்பிலிருந்து தூக்கி எறியப்பட்டார் அந்த அணியின் முன்னாள் தலைவர் டுங்கா. இரண்டாம் முறையாக பிரேசிலுக்குப் பயிற்சியளித்த அவரது வழிநடத்தலின்கீழ் தொடர்ந்து 13 நட்புமுறை ஆட்டங்களில் வென்றது அந்த அணி. ஆயினும், முக்கிய போட்டிகளைப் பார்க்கையில் 13ல் நான்கில் மட்டுமே அந்த அணி வெற்றியை ஈட்டியது.