செயின்ட் டெனிஸ்: இந்த யூரோ தொடரின் கத்துக்குட்டியாக இருந் தாலும் ஆஸ்திரியா, இங்கிலாந்து போன்ற வலிமையான அணிகளை வீழ்த்தி ஆச்சரியமூட்டும் அணியாக உருவெடுத்துள்ளது ஐஸ்லாந்து. முதன்முறையாக ஒரு முக்கிய தொடருக்குத் தகுதிபெற்றதுடன் வீரநடை போட்டு காலிறுதி வரை முன்னேறியிருக்கும் ஐஸ்லாந்து, நாளை அதிகாலை மூன்று மணிக்கு நடக்கவுள்ள காலிறுதி ஆட்டத்தில் போட்டியை நடத்தும் பிரான்சை எதிர்கொள்கிறது.
முந்தைய போட்டிகளைப் போல இம்முறையும் ஐஸ்லாந்தை அதிர்ஷ்ட தேவதை தழுவுமா என்பது சந்தேகம் தான் என்றாலும், 'மீண்டும் ஓர் அதிர்ச்சிக்குக் காத்திருங்கள்' என்று எச்சரிக்கை விடுக்கும் வகை யில் அமைந்துள்ளது அந்த அணி யின் இணைப் பயிற்றுவிப்பாளர் ஹைமர் ஹல்கிரிம்சனின் கூற்று. சொந்த மண்ணில் விளையாடு வதால் பிரான்ஸ்தான் வெற்றி நெருக்கடியில் உள்ளது என்றும் தங்களின் தோள்மீது எந்தச் சுமை யும் இல்லை என்றும் அவர் தெரி வித்துள்ளார்.
பிரான்ஸ் அணியின் பலவீனம் எதையும் கண்டறிந்துள்ளீர்களா என்று அவரிடம் கேட்டதற்கு, "நாங்கள் அப்படித்தான் நினைக்கி றோம். ஆனால் அது என்ன என்பதை ரகசியமாக வைத்திருப் போம்," என்றார் அவர். ஒவ்வோர் ஆட்டத்திலும் தங்க ளது செயல்பாடு மெருகேறி வருவ தாகக் குறிப்பிட்ட அவர், தங்களது சிறப்பான செயல்பாடு இனிமேல் தான் வரவிருக்கிறது என்றும் அவர் எதிரணிகளைப் பயமுறுத்தும் வகையில் பேசினார்.
ஐஸ்லாந்து மீது உலகக் காற்பந்தின் கவனம் திரும்பியுள்ள நிலையில் தங்களது வெற்றிப் பசி இன்னும் அடங்கவில்லை என்கிறார் அவ்வணியின் தலைவர் ஆரோன் குன்னர்சன். படம்: ஏஎஃப்பி

