சாதனை வீராங்கனை செரீனா

சாதனை வீராங்கனை செரீனா

1 mins read
a96e7c28-d61e-4a27-b07e-35f3ba9289e5
-

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் செரீனா வெற்றியாளர் பட்டம் வென்றுள்ளார். இதன் மூலம் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று முன்னாள் நட்சத்திர வீராங்கனை ஸ்டெபி கிராஃபின் சாதனையைச் சமன் செய்தார். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை நேற்று முன்தினம் எதிர்கொண்டார். இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியப் பொது விருதில் செரீனாவை வீழ்த்தி கெர்பர் வெற்றியாளர் பட்டத்தை வென்றார். இந்தத் தோல்விக்கு செரீனா விம்பிள்டன் போட்டியில் பழி தீர்த்துக்கொண்டார்.

செரீனா 7=5 எனும் புள்ளிக் கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். அடுத்த செட்டில் 4=3 என்ற நிலையில் கெர்பரின் நான்காவது சர்வீஸை திறமையாக செரீனா கையாண்டு தனதாக்கினார். இதனால் செரீனா 5=3 என முன்னிலை பெற்றார். தமது அடுத்த சர்வீஸை சிறப்பாக முடித்த செரீனா 6=3 என இரண்டாவது செட்டையும் கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலம் செரீனா ஏழாவது முறையாக விம்பிள்டன் தொடரைக் கைப்பற்றியுள்ளார்.

வெற்றியாளருக்கான கேடயத்துடன் செரீனா வில்லியம்ஸ். படம் ராய்ட்டர்ஸ்