கடலில் நீந்திச் சென்று மெஸ்ஸியைச் சந்தித்த ரசிகர்

கடலில் நீந்திச் சென்று மெஸ்ஸியைச் சந்தித்த ரசிகர்

2 mins read
d9eb76c2-75e2-45b1-8a65-1326655b8e51
-

வெலன்சியா: உலகின் மிகச் சிறந்த காற்பந்து ஆட்டக்காரரிடம் கையெழுத்துப் பெறுவதையே பெரும் பாக்கியமாகக் கருதுபவர் களுக்கு மத்தியில் லயனல் மெஸ்ஸியை நேரில் சந்தித்து, அவருடன் 20 நிமிடங்கள் உரை யாடி, ஒன்றாக பழச்சாறு அருந்தி, 'செல்ஃபி' எடுத்துள்ளார் ஆசிர் வதிக்கப்பட்ட ஒரு ரசிகர். ஆனால், இத்தனையும் அந்த ரசிகருக்கு அதிர்ஷ்டவசமாகக் கிடைத்துவிடவில்லை. அதற்காக ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குக் கடலில் நீந்தினார் அவர்.

ஸ்பானிய காற்பந்து லீக்கின் முன்னணி காற்பந்துக் குழுக்களில் ஒன்றான அட்லெட்டிகோ மட்ரிட் டின் தீவிர ரசிகர் சூலி, 24. இவர் சில நாட்களுக்குமுன் மத்திய தரைக்கடலில் உள்ள இவீத்தா தீவிற்கு உல்லாசப் பயணம் சென் றிருந்தார். அந்தத் தீவு ஸ்பெயினின் மேற்குக் கடலோரப் பகுதியில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்குள்ள கடற்கரையில் சுற்றித் திரிந்தபோது அர்ஜெண் டினா குழுவின் முன்னாள் தலை வரும் பார்சிலோனா ஆட்டக்கார ருமான மெஸ்ஸி கடலுக்குள் ஒரு சொகுசுப் படகில் இருந்ததை சூலி பார்த்துள்ளார். உடனே, ஒரு நொடிகூட யோசிக்காமல் தமது கைபேசியை ஒரு நெகிழிப் பையில் போட்டுக்கொண்டு கடலுக்குள் குதித்தார் அவர். கிட்டத்தட்ட ஒரு கி.மீ. தூரம் நீந்தி, மெஸ்ஸியின் படகை அவர் அடைந்தார். திடீரென வந்த அழையா விருந்தாளியை வரவேற்ற மெஸ்ஸி, அவருக்குப் பழச்சாறு தந்து உபசரித்து, 20 நிமிட நேரம் அவரிடம் உரையாடினார்.

ஒரு கிலோமீட்டர் தூரம் கடலில் நீந்திச் சென்று காற்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சூலி, 24. படம்: முண்டோ டெபோர்ட்டிவோ