ஊக்கமருந்து சோதனையில் மல்யுத்த வீரர் தோல்வி

ஊக்கமருந்து சோதனையில் மல்யுத்த வீரர் தோல்வி

1 mins read
4633015b-3ad6-4754-af56-fa761e31cfbc
Google News Preferred Icon

புதுடெல்லி: ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவிருந்த இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் ஊக்க மருந்து பரிசோதனை யில் தோல்வி அடைந்துள்ளார். ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், டெல்லியில் உள்ள தேசிய ஊக்கமருந்து தடுப்பு இயக் குநரகத்தில் நர்சிங் பான்சம் யாதவ் முன்னிலையானார். அவரது ரத்த மாதிரி பரிசோதித் ததில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை அவர் பயன்படுத்தி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மேலும் சில தகவல்கள் கிடைக்க வேண்டியுள்ள நிலையில், அவர் ஒலிம்பிக் போட்டி யில் பங்கேற்க தடைவிதிக்கப் படுமா என்பதை உறுதியாகத் தெரிவிக்க முடியாது என்று அதிகாரிகள் கூறினர்.