லண்டன்: இங்கிலாந்து- பாகிஸ் தான் அணிகளுக்கு இடையி லான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 330 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்கடித்துள்ளது. ஓல்டு டிராஃப்போர்ட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து இங்கிலாந்து 564 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. பாகிஸ்தான் அணி 234 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இங்கிலாந்து அணி 330 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்தின் ரூட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் இரண்டு இன்னிங்சிலும் மொத்தம் 325 ஓட்டங்கள் எடுத்தார். முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளதால் 4 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்று சமநிலையில் உள்ளது.
பாகிஸ்தானின் ஷான் மசூதின் (இடது) விக்கெட்டைச் சாய்த்ததை அடுத்து கொண்டாட்டத்தில் இறங்கும் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் (வலது). படம்: ஏஎஃப்பி

