22 ரஷ்ய படகோட்ட வீரர்களுக்குத் தடை

22 ரஷ்ய படகோட்ட வீரர்களுக்குத் தடை

2 mins read

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் போட்டியில் போட்டியிடவிருந்த 28 ரஷ்யப் படகோட்ட வீரர்களில் 22 பேருக்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது. ஊக்கமருந்து விவகாரம் தொடர்பாக இந்த 22 பேருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக உலகப் படகோட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக ஒலிம்பிக் போட்டியில் ஆறு படகோட்ட வீரர்கள் மட்டுமே ரஷ்யாவைப் பிரதிநிதிக்க முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரே ஒரு படகு மட்டும் ரஷ்யாவின் பெயரை ஏந்தும் என்று தெரிவிக்கப்பட்டது. ஐந்து படகுகளைக் கொண்டு போட்டியிட ரஷ்யா முதலில் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது. படகோட்ட வீரர்களுக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து விளையாட்டுத் துறைக்கான நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக ரஷ்யாவின் படகோட்ட சம்மேளனம் தெரி வித்துள்ளது. ஒலிம்பிக் போட்டியில் போட்டி யிட ரஷ்யாவிலிருந்து வெறும் ஆறு படகோட்ட வீரர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது அவமானத்துக்குரியது என்று சம்மேளனத்தின் தலைவர் சாடி னார். இந்நிலையில், ஊக்கமருந்து சர்ச்சை தொடர்பாக ரஷ்ய திடல்தடப் போட்டி வீரர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்கமுடியாது என்று ரஷ்ய விளையாட்டுத் துறை அமைச் சரிடம் அனைத்துலகத் திடல் தடப் போட்டி சம்மேளனம் தெரி வித்துள்ளது. ரஷ்ய வீரர்கள் ஊக்கமருந்து உட்கொள்வதில் அந்நாட்டு அதிகாரிகளுக்குப் பெரும் பங்கு உண்டு என்று தெரிவித்திருந்த ரஷ்ய தம்பதியர், ஊக்கமருந்து உட்கொள்ளும் ரஷ்ய வீரர்களும் இவ்வாண்டின் ஒலிம்பிக் போட்டியில் போட்டியிடுவர் என்று கூறியுள்ளனர். ஊக்கமருந்து உட்கொள்ளும் ரஷ்ய வீரர்களுக்கு எதிராகப் போதுமான நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்று அவர்கள் குறை கூறினர். ரஷ்யாவின் ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் முன்னாள் அதிகாரியான விடாலி ஸ்டெஃப னோவும் அவரது மனைவியான 800 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங் கனை யுலியாவும் ரஷ்யாவில் உள்ள ஊக்கமருந்து விவகாரத் தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதாகக் கூறப் படுகிறது. ரஷ்யாவைவிட்டு வெளியேறிய இவர்கள் இருவரும் பாதுகாப்பு நிமித்தம் தற்போது ரகசிய இடத்தில் வசித்து வருகின்றனர்.