புதுடெல்லி: ஊக்கமருந்து பரி சோதனையில் தோல்வி அடைந்த இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவுக்குப் பதிலாக பிரவீன் ராணாவை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பி வைக்க இந்திய மல்யுத்த சம்மேளனம் முடிவெடுத்துள்ளது. தாம் ஊக்கமருந்து உட்கொள்ள வில்லை என்றும் தமக்கு எதிராகச் சதி வேலை நடந்துள்ளதாகவும் நர்சிங் தொடர்ந்து கூறி வருகிறார். தமது உணவில் ஊக்கமருந்து கலக்கப்பட்டதாக நர்சிங் குற்றம் சாட்டியுள்ளார். இதைச் செய்ததாக அவர் இருவரை அடையாளம் காட்டி போலிசாரிடம் புகார் செய் துள்ளார்.
சக மல்யுத்த வீரர்கள் இருவர் தமக்கு எதிராகச் சதி வேலை செய்துள்ளனர் என்று நர்சிங் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஒரு வருக்கு 17 வயதுதான் ஆகிறது. நர்சிங் பல்கேரியாவில் போட்டி ஒன்றில் பங்கெடுத்துக் கொண் டிருந்தபோது குற்றம் சாட்டப் பட்டவர்களில் ஒருவர் இந்தியாவில் நர்சிங் தங்கியிருந்த விடுதியில் அவரது அறைக்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது.

