'ரஷ்ய விளையாட்டாளர்களைக் குறிவைத்து செய்யப்பட்டது'

'ரஷ்ய விளையாட்டாளர்களைக் குறிவைத்து செய்யப்பட்டது'

2 mins read
19f69933-8f40-47f9-8403-aeadbdda2a0c
-

மாஸ்கோ: ரஷ்ய விளையாட்டாளர் கள் மீதான தடை குறிவைத்து வேண்டுமென்றே செய்யப்பட்டது என்று கூறியுள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின். ஒலிம்பிக் போட்டிக்குப் புறப் பட்ட ரஷ்ய விளையாட்டாளர்களை வழியனுப்பும் நிகழ்ச்சியில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். ஊக்கமருந்து விவகாரம் தொடர்பாக ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய வீரர்கள் பங்கேற்பது கேள்விக்குறியாகவும் சர்ச்சை யாகவும் இருக்கும் நிலையில், 70 வீரர்கள் கொண்ட ரஷ்ய ஒலிம்பிக் குழு பிரேசிலின் ரியோ நகருக்குப் புறப்பட்டனர். அப்போது பேசிய அதிபர் புட்டின், "ரஷ்ய வீரர், வீராங்கனை களுக்குத் தடை விதிக்கப்பட்டது முற்றிலும் பாரபட்சமானது. இது வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல். "இதனால், ஒலிம்பிக்கில் பல்வேறு வகையான விளையாட்டுக் களில் ரஷ்யர்கள் பங்கேற்க இயலாத நிலையை ஏற்படுத்தி விட்டார்கள். இதனால் ஒலிம்பிக் போட்டியின் தரம் குறைந்து பாதிப்பை ஏற்படுத்தும்," என்றார் அவர். இந்நிலையில், கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, நீச்சல், மேசை பூப்பந்து ஆகிய விளையாட்டுக் குழுக்களின் வீரர் கள் ரஷ்யாவின் செரிமிதியோவோ விமானநிலையத்தில் ரியோ செல்ல தயாராகக் காணப்பட்டனர். அனைத்துலகப் போட்டிகளில் ரஷ்ய விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள தடைவிதிக்க வேண்டும் என்ற தங்களது பரிந்துரையை ஏற்காத ஒலிம்பிக் அனைத்துலக ஒலிம்பிக் குழுவின் முடிவை உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் கடுமையாக விமர்சித்தது. 'இது ஊக்கமருந்து உட்கொள் ளாதவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையிலான போட்டியல்ல' என்று ஆணையத்தின் தலைவர் கூறினார். ரஷ்யா 387 போட்டியாளர்களை ஒலிம்பிக்கிற்கு அனுப்ப நம்பிக்கைக் கொண்டிருந்த வேளையில், அவர் களில் 100க்கும் மேற்பட்டவர் களுக்குத் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. தடகளப் போட்டிகளில்

ஒரேஒரு ரஷ்ய வீராங்கனை மட்டுமே பங்கேற்கிறார்.