யுனைடெட்டை நெருங்கி வரும் பால் போக்பா

யுனைடெட்டை நெருங்கி வரும் பால் போக்பா

1 mins read
eb8df726-b15f-4374-802c-183eca7e27eb
-

லண்டன்: பிரெஞ்சுக் காற்பந்து நட்சத்திரம் பால் போக்போ (படம்) இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஜாம்ப வான் மான்செஸ்டர் யுனைடெட் டுடன் எந்நேரமும் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'தி கார்டியன்' நாளிதழைப் பொறுத்தவரையில், யுனைடெட் டிடம் போக்பாவை குறைந்தது 110 மில்லியன் பவுண்டுக்கு விற்க இத்தாலிய லீக்கில் போட்டியிடும் யுவெண்டஸ் முடிவு செய்துவிட்டது. இந்நிலையில், யுனைடெட்டுடன் இணைவதற்கு முன்பு அமெரிக்கா வில் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் போக்பா மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார்.

அதில் அவர் சிறப்பான உடற் திறனுடன் இருப்பதாக அறிக்கப் பட்டது என்று கூறப்படுகிறது. மருத்துவப் பரிசோதனைக்காக போக்பா லாஸ் ஏஞ்சலிசில் இருந்த போது தற்செயலாக அவருக்கு யுனைடெட் ரசிகர் ஒருவருடன் சந்திப்பு ஏற்பட்டது. அந்த ரசிகர் வைத்திருந்த யுனைடெட் குழுவின் சீருடையில் போக்பா கையெழுத் திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.