எதிர்வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யாதது வர்த்தக ரீதியிலான முடிவு. கலாசார, சமூக, இளையர் அமைச்சர் கிரேஸ் ஃபூ நேற்று இதனைத் தெரிவித்தார். ஊடகங்களுக்கு பேட்டி யளித்த அவர், "அது உரிமை யாளர்கள், ஒளிபரப்பாளர்களுக்கு இடையே பேச்சு வார்த்தைக்குப் பின் எடுக்கப்பட வேண்டிய முடிவு," என்றார். "ஏற்கெனவே நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகள் வெள் ளிக்கிழமை முதல் ஒளிபரப்பப் படும். ஆனால் தாமதமான ஒளி பரப்பினால் சிங்கப்பூர் வீரர்கள் பதக்கங்களை வென்றால் ஏற் படக்கூடிய குதூகல உணர்வை அது குறைத்துவிடாது," என்று அவர் குறிப்பிட்டார்.
சென்ற ஆண்டு உள்ளூரில் நடைபெற்ற தென் கிழக்கு ஆசிய விளையாட்டுகளை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர் கிரேஸ் ஃபூ, "முக்கியமான விளையாட்டுப் போட்டிகள் சிங்கப்பூரில் நடை பெறும்போது ஒட்டு மொத்த நாடே மகிழ்ச்சியில் திளைப்பது வழக்கமான ஒன்றே," என்றார். "இம்முறையும் ஒலிம்பிக் விளையாட்டுகள் முக்கிய மானவைதான். அதற்காக அதிக வீரர்கள் கடும் பயிற்சி எடுத்துள் ளனர். ஆனால் விளையாட்டுகள் நடைபெறும் இடம் 30 மணி நேர பயணத்துக்கு அப்பால் உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நேர வித்தியாசம் உள்ளது. அதனால் சிங்கப்பூரர்கள் இந்த விளை யாட்டுப் போட்டிகளில் மிகுந்த அக்கறை கொண்டு நமது வீரர் களின் சாதனையைப் பார்க்க விருப்பம் கொண்டு தாமத மானாலும் பார்க்க முற்படுவர்," என்று அமைச்சர் கிரேஸ் ஃபூ சொன்னார்.

