வெறுங்காலுடன் ஓடிய பி.சி.சுப்பையா

வெறுங்காலுடன் ஓடிய பி.சி.சுப்பையா

3 mins read
40a78f5d-08a6-4b23-8b32-bb04b7ad95eb
-

மியூனிக் ஒலிம்பிக் அரங்கத்தில் 10,000 மீட்டர் ஓட்டத்துக்காக வெறுங்காலுடன் ஓடுவதற்கு தயா ரானதும் என்னை மற்றவர்கள் ஆச்சரியத்துடன் முறைத்துப் பார்த்தனர். நான் ஒன்று கிறுக்கனாக இருக்க வேண்டும் அல்லது ஏழை யாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற் பட்டது. ஒரு சிலர், நான் இந்தியாவின் ஏழ்மையான பகுதியிலிருந்து வந்த வன் என்று கருதினர். என்னைப் பற்றி ஓட்டப்பந்தய அதிகாரிகளுக்கும் கவலை ஏற் பட்டது. மெல்லிய தேகத்துடன் 1.68 மீட்டர் உயரத்தில் என்னிடம் வந்து நின்ற 23 வயது நபர் ஒருவர், "உன்னுடைய காலணி களை மறந்து விட்டீர்கள். கவலைப்படாதீர்கள், நீங்கள் போய் எடுத்துவரும் வரை காத்திருக் கிறோம்," என்றார்.

ஆனால் நான் இப்படித்தான் ஓடுவேன் என்பது அவர்களுக்கு தெரியாது. பதினேழு வயதில் நான் முதல்முதலாக ஓடியபோது காலணிகள் வாங்க வசதி இல்லாமல் வெறுங்காலுடன்தான் ஓடினேன். மெக்ரிட்சி நீர்த்தேக் கத்தை சுற்றி பலமுறை ஓடியபோது எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை மிக வும் ரசித்தேன். என்னுடைய இளமைக் காலத் தில் சிங்கப்பூர் குதிரைச் சவாரி சங்கத்தில் பணியாற்றினேன். அப் போது குதிரைகளைப் பராமரித்து வந்தேன். என்னுடைய உடல் உறு தியை வலுப்படுத்திக் கொள்வதற் காக குதிரைகளுடன் சேர்ந்து ஓடி னேன். 10,000 மீட்டர் ஓட்டத்தை 31 நிமிடம், 59.2 வினாடிகளில் முடித்தேன். என்னுடைய சொந்த தேசிய சாதனையை (32:18,8) நானே முறியடித்தேன். அதோடு 10,000 மீட்டர் ஓட்டத்தை 32 நிமிடங்களுக்குள் முடித்த முதல் சிங்கப்பூரர் என்ற பெயரையும் பெற்றேன். மியூனிக் ஒலிம்பிக்கில் இறுதிக் கோட்டை தாண்டிய சில நொடி களில் என்னுடைய பெயர் அறி விக்கப்பட்டது. தேசிய சாதனையை முறியடித்ததற்காக எனக்குப் பாராட்டுகள் குவிந்தன.

அதே இடத்தில் என்னுடைய சாதனையை அங்கீகரிக்கும் வகை யில் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதை இன்னமும் இன்றுவரை வைத்துள்ளேன். அப்போது ஒலிம்பிக் கிராமத் தில் என்னை அணுகிய அடிடாஸ், பூமா நிறுவனத்தினர் எனக்கு காலணிகளையும் விளையாட்டு உடைகளையும் வழங்க முன் வந்தனர். ஆனால் உள்ளூர் அறப் பணி அமைப்புகளுக்கு கொடுப் பதற்காக அவற்றை ஏற்றுக் கொண்டேன். ஒலிம்பிக்கில் என்ன செய்ய வேண்டும் என்று நினைத் தேனோ அந்தச் சாதனையை செய்துமுடித்தேன். 32 நிமிடங் களுக்குள் முடிக்க வேண்டும் என் பதே அது. தேசிய சாதனையை நிகழ்த்தியதில் மகிழ்ச்சி அடைந் தேன். அதே ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூரின் முதல் நீண்ட தூர ஓட்டப் பந்தய வீரனாக இருப்பேன் என்று கற்பனையில்கூட எண்ணிப் பார்க்கவில்லை.

காற்பந்து விளையாட்டுதான் எனக்கு மிகவும் பிடித்த விளை யாட்டாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் ஓட்டத்தில் கவனம் செலுத்த முடிவு செய்தேன். 1971ல் கோலாலம்பூரில் நடை பெற்ற தென்கிழக்கு ஆசிய தீப கற்ப விளையாட்டில் 5,000 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத் தையும் 10,000 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தையும் வென்றேன். அப்போது 1971ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் என்ற பெருமையும் கிடைத்தது-. மியூனிக் கில் ஏற்பட்ட அனுபவங்களை இப் போதும் அசைபோட்டு ரசிக்கிறேன். இப்போது திரும்பிப் பார்த்தால் ஓட்டத்தில் கவனம் செலுத்தியது தவறு இல்லை என்றே தோன்று கிறது.

1972ஆம் ஆண்டின் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 10,000 மீட்டர் ஓட்டத்தை 31 நிமிடம், 59.2 வினாடிகளில் கடந்து தமது சொந்த தேசிய சாதனையை பி.சி. சுப்பையா முறியடித்தார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்