விழாக்கோலத்தில் ரியோ டி ஜெனிரோ

விழாக்கோலத்தில் ரியோ டி ஜெனிரோ

2 mins read
f3025788-7d50-4369-bf93-cceccebd3557
-

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் போட்டி நெருங்கி வர, அதை ஏற்று நடத்தும் ரியோ டி ஜெனிரோ நகரம் விழாக்கோலம் பூண் டுள்ளது. சாதாரண நாட்களில்கூட கொண்டாட்டங்களுக்கு இந்நகரம் பெயர் போனது. உலகின் பார்வை இப்போது அதன் திசையை நோக்கித் திரும்பி உள்ள இந்த வேளையில் நகரெங்கும் பல விழாக்களை அது நடத்தி வருகி றது. போட்டிகள் நடைபெறும் 32 இடங்களுக்குச் செல்லும் ரசிகர் களின் கண்களைப் பறிக்கும் அளவக்குப் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாரா எனும் இடத்தில் உள்ள ஒலிம்பிக் பூங்காவுக்குச் செல் பவர்கள் அங்கு நடைபெறும் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு திளைக்கலாம். போட்டி களைக் காண அவர்கள் விளை யாட்டரங்கத்துக்குள் செல்ல வேண்டியதில்லை. போட்டிகள் நடைபெறும் இடங்களைச் சுற்றி வெளிப் புறங்களில் பல பெரிய திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் வழியாக விளையாட்டரங்கத்தில் நடைபெறும் போட்டிகளை ரசிகர் கள் காணலாம். அதுமட்டுமல்லாது, போட்டிகள் நடைபெறும் இடங்களைச் சுற்றி மேடைகள் அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

"நடத்தப்படவிருக்கும் விழாக் களுக்கான ஏற்பாடுகள் மிக அற்புதமாக உள்ளன. போட்டியின் போது விழாக்கள் நடைபெறும் இடங்கள் உலகின் பல நாடுகளிலிருந்து வருபவர் களுக்குச் சந்திப்பிடங்களாக அமையும்," என்று ரியோ டி ஜெனிரோவின் மேயர் எட்வார்டோ பாயேஸ் தெரிவித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த ஒலிம்பிக் போட்டியில் கோல்ஃப் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியைக் காண வரும் ரசிகர்கள் கோல்ஃப் மைதானத்தின் வாசலில் அமைக்கப்பட்டுள்ள இருவழித் தொடர்பு தொழில்நுட்பம் வாயிலாக கோல்ஃப் விளையாடி மகிழலாம். அதற்கு முன்பு அங்கு இருக்கும் கோல்ஃப் பயிற்று விப்பாளர்களிடம் பத்து நிமிடங் களுக்குப் பயிற்சி பெறலாம். விளையாட்டரங்கத்தில் நடை பெறும் விளையாட்டுகள் கண் ணுக்கு விருந்தாக இருக்கும் அதே வேளையில் ரசிகர்களின் உணவைப் பற்றியும் ஏற்பாட்டாளர் கள் மறந்துவிடவில்லை. விளை யாட்டரங்கத்தில் திரண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஏறத்தாழ 40 வகை தின்பண்டங்களும் பானங்களும் அறுசுவை விருந்தளிக்கும் என ஏற்பாட்டுக் குழுவினர் கூறு கின்றனர். அவற்றில் பிரேசிலிய உணவுப் பொருட்களும் அடங்கும்.

இதற்கிடையே, ரியோ டி ஜெனிரோவின் மற்ற பகுதிகளும் களை கட்டியுள்ளன. பிரேசிலியக் கலாசாரத்தை உலக மக்களுக்கு எடுத்துக்காட்ட இடங்கள் அமைக் கப்பட்டுள்ளன. பிரேசிலிய நடனங்கள், விளையாட்டுப் பயிலரங்குகள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவை மூலம் ஒலிம்பிக் உணர்வைக் கொணர ரியோ டி ஜெனிரோ தயாராகிவிட்டது.

ஒலிம்பிக் கிராமத்துக்கு வந்த கெமரூன் குழுவுக்குப் ரியோ டி ஜெனிரோ வரவேற்பு விழா நடத்தியது. விழாவில் வரவேற்புக் குழுவினருடன் ஆடி மகிழும் கெமரூன் வீரர் (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ்