ஒலிம்பிக் போட்டிகள் நேரடி ஒளிபரப்பு

ஒலிம்பிக் போட்டிகள் நேரடி ஒளிபரப்பு

1 mins read

சிங்கப்பூர்: ஒலிம்பிக் விளையாட் டுப் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்ப தேசிய ஒளிபரப்பு நிறு வனமான மீடியாகார்ப்பும் ஒளி பரப்பு உரிமைகளைப் பெற் றிருக்கும் டெண்ட்சு நிறுவனமும் இணக்கம் கண்டுள்ளன. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்க வுள்ள வேளையில், நேற்று இதற் கான உடன்பாடு எட்டப்பட்டது. இந்தப் போட்டிகளை இன்றி லிருந்து இம்மாதம் 22ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒக்டோ ஒளிவழியிலும் நான்கு டோகல் ஒளிவழிகளிலும் இலவசமாக கண்டு களிக்கலாம்.

இதில் டோகல் ஒளிவழிகள் இணைய ஒளிவழிகள் என்பதும் அவற்றில் போட்டிகளைக் கண்டு களிப்பதற்குத் தனி 'செட்டாப் பாக்ஸ்' தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக, டெண்ட்சு போட்டிகளை நேரடியாக ஒளி பரப்பும் உரிமைக்கு ஆறு மில்லி யன் அமெரிக்க டாலர்கள் வேண்டுமெனக் கேட்டதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன. இதனால், இந்த உரிமத்தைப் பெறத் தேவையான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய மறுத்ததாகவும் அறியப்படுகிறது.

இதுபற்றிக் கருத்துக்கூறிய கலாசார, சமூக, இளையர் அமைச்சின் பேச்சாளர் ஒருவர், "ஒலிம்பிக் போட்டிகள் போன்ற முக்கிய போட்டிகளை நேரடி ஒளிபரப்புக்கான விலை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வந்துள்ளன. இந்த ஒளிபரப்புக் கட்டணங்களுக்குச் செலவு செய் வது புத்திசாலித்தனமாகாது, அவை அவ்வளவு மதிப்புப் பெறாது என்னும் முடிவுக்கு நாங்கள் வந்தோம்," என்று விளக்கினார்.