ஹாக்கி போட்டியில் இந்தியா வெற்றி

ஹாக்கி போட்டியில் இந்தியா வெற்றி

1 mins read

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் போட்டிகளில் 12 ஆண்டுகளுக் குப் பிறகு இந்தியா ஹாக்கியில் வெற்றி பெற்றுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் எட்டு முறை தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா கடைசியாக 2004ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி ஒன்றில் வென்றது. அதன் பின்னர், நேற்று முன் தினம் அயர்லாந்துடனான போட்டியிலேயே இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அயர்லாந்துடனான போட்டியில் இந்திய வீரர் ருப்பிண்டர் பால் சிங் இரண்டு கோல்கள் போட இந்தியா 3=2 என்ற கோல் எண்ணிக்கையில் அயர்லாந்தை வீழ்த்தியது.

ஆனால், முதல் இரண்டு கோல்களை ஆட்டத்தின் 15வது, 27வது நிமிடங்களில் முறையே ரகுநாத், ருப்பிண்டர் பால் சிங் மூலம் போட்ட இந்தியாவுக்கு அயர்லாந்து பலமான போட்டி யைக் கொடுத்தது. ஆட்டத்தின் 45வது நிமிடத் தில் ஜெர்மைன் ஜான் என்பவர் மூலம் ஒரு கோல் போட்ட அயர்லாந்து பின்னர் இந்தியா வின் ருப்பிண்டர் பால் சிங் மற்றொரு கோல் போட்ட பின்னர் அயர்லாந்து தன் பங்குக்கு இரண்டாவது கோலை போட்டு ஆட்டத்தில் விறுவிறுப்பை புகுத் தியது. இந்த ஆட்டத்தின் அனைத்து கோல்களுமே பெனால்டி கார்னர் மூலம் வந்த நிலையில், ஒரு கட்டத்தில் நான்கு நிமிட இடைவெளியில் அயர்லாந்து நான்கு பெனால்டி கார்னர் வாய்ப்புகளைப் பெற்று இந்தியாவுக்கு கத்தி முனையில் நிற்கும் அனுபவத்தைத் தந்தது. இன்று நடைபெறவுள்ள இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா ஜெர்மனியுடன் மோது கிறது.