பர்மிங்ஹம்: இங்கிலாந்து அணிக் கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக் கெட் அணி 141 ஓட்ட வித்தி யாசத்தில் தோற்றது. இதனால் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அந்த அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. முதல் இன்னிங்சில் இங்கி லாந்து 297 ஓட்டங்களும் பாகிஸ் தான் 400 ஓட்டங்களும் எடுத் தன. 103 ஓட்டங்கள் பின்னிலை யில் இருந்தபோதும் இரண்டாவது இன்னிங்சில் வெளுத்து வாங்கிய இங்கிலாந்து, ஆறு விக்கெட் இழப்பிற்கு 445 ஓட்டங்களை எடுத்தநிலையில் இன்னிங்சை முடித்துக்கொண்டது. இதையடுத்து, 343 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இரண் டாம் இன்னிங்சைத் தொடங்கிய பாகிஸ்தான் 201 ஓட்டங்களுக்குச் சுருண்டது.
இரு இன்னிங்ஸ்களிலும் அரை சதம் அடித்ததுடன் 2வது இன்னிங்சில் இரண்டு விக்கெட் டுகளையும் கைப்பற்றிய இங்கி லாந்து வீரர் மொயீன் அலி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். நான்காவது, கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் லண்டன் கெனிங்டன் ஓவல் விளையாட்டு அரங்கில் தொடங்குகிறது.

