கரீபியன் பிரிமியர் லீக் டி20: கெய்ல் அணிக்குப் பட்டம்

கரீபியன் பிரிமியர் லீக் டி20: கெய்ல் அணிக்குப் பட்டம்

1 mins read

செயின்ட் கிட்ஸ்: இந்தியாவின் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரைப் போன்று வெஸ்ட் இண்டீசும் கடந்த நான்கு ஆண்டுகளாக கரீபியன் பிரிமியர் லீக் தொடரை நடத்தி வருகிறது. இவ்வாண்டுக்கான தொடரில் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் தலைமையிலான ஜமைக்கா தல்ல வாஸ் அணி பட்டம் வென்றுள் ளது. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் அந்த அணி கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக கிண்ணத்தைக் கைப்பற்றியது. முதலில் பந்தடித்த கயானா அணி 16.1 ஓவர்களில் 93 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து பந்தடித்த ஜமைக்கா அணி 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. ஆட்ட நாய கனாக இமத் வாசிமும் தொடர் நாயகனாக ஆண்ட்ரே ரசலும் தேர்வு பெற்றனர்.