ஒலிம்பிக் போட்டிக்கான காற் பந்துப் போட்டியின் முதல் சுற்றிலேயே வெளியேறும் அபாயத் தை பிரேசில் நெருங்கியுள்ளது. ஈராக்குக்கு எதிரான ஆட்டத் தில் பிரேசில் கோல் ஏதும் போடாமல் சமநிலை கண்ட விதம் அதன் ரசிகர்களைக் கடும் அதிருப்தி அடைய செய்துள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற ஆட்டத்திலும் பிரேசில் தென்னாப் பிரிக்காவுடன் கோல் ஏதுமின்றி சமநிலை கண்டது.
சொந்த மண்ணில் விளையாடி உலகக் கிண்ணத்தை வெல்ல முடியாமல் போன சோகத்தை மறக்க ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வதுதான் ஒரே வழி என்ற பேரவாவுடன் திரண்ட பிரேசில் ரசிகர்கள், ஆட்டம் முடிந்ததும் சினங் கொண்டு தங்கள் ஆட்டக்காரர் களைத் தூற்றத் தொடங்கினர். எப்படியாவது கோல் போட்டு வெற்றி பெறவேண்டும் என்று முயற்சியில் இறங்கிய பிரேசில் வீரர்களுக்கு ஈராக்கின் பிடிவாதத் தற்காப்பு ஏமாற்றத்தையே தந்தது. இறுதி வரை பிரேசிலால் ஈராக்கின் தற்காப்பு அரணைத் தகர்க்க முடியாமல் போனது.
கோல் போட முடியாத விரக்தியில் பிரேசிலின் ஜீசஸ் கேப்ரியல் (வலது). படம்: ராய்ட்டர்ஸ்

