மேன்யூவில் பொக்பா

மேன்யூவில் பொக்பா

1 mins read
b4af2f7d-1b68-4894-9c62-8bbc814f1198
-

மான்செஸ்டர்: அண்மைக்காலமாக மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு பிரஞ்சு காற்பந்து நட்சத்திரமான பால் பொக்பா இப்பொழுது வருவார், அப்பொழுது வருவார் என்ற பேச்சு பரவலாக எழுந்ததை அடுத்து அவரது வரவு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக ஆனது. தற்பொழுது ஒருவழியாக பால் பொக்பா நேற்று யுனைடெட்டுக்கு உலகத்திலேயே அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட விளை யாட்டாளர் என்ற முத்திரையுடன் வந்து சேர்ந்தார். இவருக்கு கொடுக்கப்பட்ட விலை தெரிவிக் கப்படவில்லை. ஆனால், அது 89 மில்லியன் பவுண்டுகளுக்கு குறை வில்லை என்று நம்பப்படுகிறது.

இது உண்மை என்றால், 2013ஆம் ஆண்டு டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவிலிருந்து ரியால் மட்ரிட்டுக்கு சென்ற கேரத் பேல் என்ற வீரருக்கு கொடுக்கப்பட்ட 85 மில்லியன் பவுண்டுகளைவிட அதிகம் என்றாகிறது. "காற்பந்து விளையாட்டில் நான் சாதிக்க வேண்டிய அனைத் தையும் சாதிக்க இதுவே சரியான குழு. நான் மேன்யூவிற்கு திரும்பி வருவதில் பெரு மகிழ்ச்சியடை கிறேன்.

மான்செஸ்டர் யுனைடெட்டுடன் இணைந்துள்ள பொக்பா. படம்: இன்ஸ்டகிராம்